ராமநாதபுரம் கோயில்களில் சஷ்டி விழா துவக்கம்: 17.ல் சூரசம்ஹாரம்
ADDED :3661 days ago
ராமநாதபுரம்: முருகன் கோயில்களில் சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி, குயவன்குடி சாது சுப்பையா, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்திவடிவேல், காந்தி நகர் சண்முக சடாச்சரம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சஷ்டி விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் மாலை அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, உள் பிரகாரங்களில் சுவாமி வீதியுலா நடக்கின்றன. இரவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நவ., 17 இரவு சூரசம்ஹாரம். நவ.,18ல் தெய்வானை திருக் கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடு களை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்துள்ளனர்.