உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

குன்றக்குடி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

சிவகங்கை: குன்றக்குடி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று (நவ.,12) துவங்கியது. முக்கிய நிகழ்வான 6ம் நாள் விழா வில் மாலை 5.30 முதல் 6.30 மணிவரை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நவ.,18ந்தேதி காலை 11 மணிக்கு திரு முழுக்காட்டு, மாலை 6 முதல் 6.45 க்குள் தெய்வானை திருமண நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். கந்தசஷ்டியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !