உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மூன்றாமாண்டு கந்தசஷ்டி விழா, நேற்று காலை துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ேஹாமம், உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிகம்பத்துக்கு, சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, கொடியேற்றினார். நாளை காலை, 11:00 மணிக்கு, இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிேஷகம் நடத்துகின்றனர். வரும், 17ல், பிற்பகல் 3:00 மணியளவில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், சூரசம்ஹார விழா, 18ல், காலை, 8:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், நண்பகல், 12:00 மணிக்கு, அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு, முருகன் தேவியருடன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கந்தசஷ்டி திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், முருகானந்தம், கிருஷ்ணா செந்தில், அழகிரி, சரவணன் உட்பட பலர், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

*பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, கந்தசஷ்டி உற்சவம் துவக்க விழாவும், மாலை 6:00 மணிக்கு பேரூர் ஆதினம் கயிலை மாமுனிவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அருளுரை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. வரும், 16ல், மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம், 17ல், பிற்பகல், 3:00 மணி முதல், பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசலம் அடிகாளர் முன்னிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கின்றன. 18ல், காலை, 10:00 மணிக்கு, மகா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 19ல், மாலை, 6:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !