குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கொடியேற்று விழா
ADDED :3661 days ago
சேலம்: சேலம் செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், மகாசஷ்டி சூரசம்ஹார உற்சவ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கொடியேற்று விழா நேற்று நடந்தது. அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், கடந்த, 10ம் தேதி சிறப்பு அபிஷேகத்துடன், மகாசஷ்டி சூரசம்ஹார உற்சவ நிகழ்ச்சி துவங்கியது. கொடியேற்று விழா, நேற்று காலை, 8 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 9.30 மணிக்கு கோவில் மூலவரான சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானை தாயாருக்கு கல் அலங்காரம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, துவஜாரோகணம், அங்குரார்ப்பணம், ராஜபந்தனம் செய்து கொடியேற்றப்பட்டது. சக்திவேலும், ஆறுமுகசாமியும் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்.