40 அடி உயர ஊட்டி முருகன் சிலைக்கு சிறப்பு பூஜை!
ஊட்டி: கந்த
சஷ்டியை முன்னிட்டு, ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில்,
சிறப்பு பூஜை நடந்தது. கந்தர் சஷ்டியை முன்னிட்டு, ஊட்டி எல்க்ஹில்
பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், சஷ்டி விழா துவங்கியது. நேற்று
சுவாமிக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால்
அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து,
40 அடி உயரமுள்ள முருக பெருமான் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 17ம்
தேதி, 108 கலச பூஜை; 108 படி பூஜை; விக்னேஸ்வர பூஜை மற்றும் ஓமம் நடக்க
உள்ளது.
* இதே போல், ஊட்டி லோயர்பஜார் சுப்ரமணியர் கோவில்,
மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில், எம்.பாலாடா ஆனந்தமலை முருகன் கோவில்,
காந்தல் காசிவிஸ்வநாதர் கோவில், ஊட்டி மாரியம்மன் கோவில், கூடலூர்
குசுமகிரி முருகன் கோவில், பந்தலூர் குறிஞ்சி நகர் முருகன் கோவில்களிலும்,
சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்கள் விரதமிருந்து,
பூஜையில் பங்கேற்றனர்.