உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயகத்தின் பொன்மொழிகள்!

நாயகத்தின் பொன்மொழிகள்!

எடுக்கும் தாழ்ந்த கையை விட கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.நீங்கள் உண்மை பேசுவதைக் கடைபிடிப்பீர்களாக. ஏனென்றால், நிச்சயமாக அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய் பேசுவது பற்றி எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது நரக வாசல்களில் ஒன்றாகும். நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ, அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான்.திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !