உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமேலி ஐயப்பன் கோவில்கள்!

எருமேலி ஐயப்பன் கோவில்கள்!

சபரிமலை செல்லும் வழியிலுள்ள எருமேலியில், ஐயப்பனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று பெரியம்பலம் எனப்படும் பெரிய கோவில், மற்றொன்று சிறியம்பலம் எனப்படும் சிறிய கோவில். தாயின் வயிற்று வலியை போக்க புலிப்பால்தேடி ஐயப்பன் காட்டுக்கு சென்ற போது எருமைத் தலையுடன் கூடிய மகிஷியை வதம் செய்த இடம் எருமேலி. எருமை தலை உடைய மகிரிஷியை கொன்றதால் அந்த இடம் தொடக்கத்தில் எருமைகொல்லி என்று அழைக்கப்பட்டது. இது மருவி எருமேலி என்று பெயர் பெற்றது.ஐயப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோவில்களில் உள்ளன. எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. சிறிய கோவிலில் பேட்டை கட்டும் (வர்ணப்பொடி பூசி நடனமாடுதல்) பக்தர்கள் பெரிய கோவிலில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்கின்றனர்.மகரவிளக்கு விழாவுக்கு மூன்று தினங்களுக்கு முன், எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றதாகும். எருமேலி கோவில்கள், காலை 5.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். பெரிய கோவிலில் மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேறி பிரம்மோற்சவம் துவங்கும். உத்திரம் நட்சத்திரத்தில் ஆறாட்டுடன் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !