கஸ்தூரி அரங்கநாதருக்கு 365 வஸ்திரம் சமர்ப்பித்தல்
ADDED :3658 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நடக்கும் முக்கிய பூஜைகளில், கைசிக ஏகாதசி வைபவம், பிரதானமானதாகும். நாளை (22ம் தேதி) கைசிக ஏகாதசியை முன்னிட்டு, கஸ்தூரி அரங்கநாதருக்கு காலை, 7 மணிக்கு திருமஞ்சனமும், மாலை, 6 மணி அளவில், 365 வஸ்திரம் சமர்பித்தலும் நடக்கிறது. தொடர்ந்து கைசிக புராணம் பாசுரங்களாக சேவிக்கப்படும். கைசிக ஏகாதசி அன்று வஸ்திரம் சமர்ப்பித்தலால், பெருமாளுக்கு வஸ்திரத்தினால் ஏற்படும் குறைகள் நீங்கும் என்பது ஐதீகம்.