திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு பட்டாபிஷேகம்
ADDED :3655 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, இன்று முருகனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் மண்டபத்தின் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
பட்டாபிஷேகம்: விழா முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகம், நாளை காலை 8.30 மணிக்கு தேரோட்டம், மாலை 6.15 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். நவ. 26ல் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
தீப கொப்பரை: மகா தீபத்திற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை கோயிலில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 300லிட்டர் நெய்யில் 150 மீட்டர் காடா துணியை திரியாக்கும் பணி நடக்கிறது. திருவிழாவின் ஆறாம் நாளான நேற்றுமுன்தினம் சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நடந்தது.