திருக்கார்த்திகை நைவேத்தியம்!
ADDED :4004 days ago
மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே மிகச் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய ஈசன், தனிப்பெருங்கருணையோடு நமக்கருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. திருக்கார்த்திகையன்று சிவனுக்கும், முருகனுக்கும் வெல்லம் சேர்த்த கார்த்திகை பொரி, அப்பம், பாயாசம், பிடி கொழுக்கட்டை ஆகியவை நைவேத்யம் செய்யப்படும்.