உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கிரிவலம் எந்த மாதம் துவங்கலாம்!

திருவண்ணாமலை கிரிவலம் எந்த மாதம் துவங்கலாம்!

திருவண்ணாமலைக்கு மாதம் தோறும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் சந்திரனின் 16 கலைகளும் பக்தர்களின் உடல் மீது படுவதால், மனோபலம் அதிகரிக்கிறது. மனோபலம் தரும் நம்பிக்கை காரணமாக அவர்கள் எடுத்த செயல்களில் வெற்றி அடைகிறார்கள். தாங்கள் துவங்கும் செயல்களுக்கு அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் பூரண ஆசி தருவதாகக் கருதுகிறார்கள். பொதுவாக கிரிவலத்தை முதன் முதலாகத் துவங்குவோர்கள் மார்கழி மாதம் துவங்குவது நல்லது. மார்கழியில் ஏதாவது ஒரு நாளில் திருவண்ணாமலையை ஒரே ஒரு முறை வலம் வந்தாலும், அந்த ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனை அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !