யாரெல்லாம் கிரிவலம் வரலாம்!
ADDED :4004 days ago
திருவண்ணாமலையை வலம் வர மனிதர்களிடையே எந்த வித்தியாசமும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. படித்த அறிஞர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும், முரடர்களோ, கொலை முதலான கொடும் குற்றம் செய்தவர்களோ, குலத்தில் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ யாராக இருந்தாலும் அருணாசலத்தை வலம் வரலாம். இதன் காரணமாக, இவர்கள் செய்த கோடிக்கும் மேற்பட்ட பாவங்கள் தீர்ந்து போகும். அது மட்டுமின்றி, இவர்களுக்கு சொர்க்கமும் கிடைக்கும். மாணவர்கள் அருணாசலத்தை வலம் வந்தால் படிப்பில் மட்டுமின்றி, ஆன்மிக தத்துவங்களிலும், பிற கலைகளிலும் சிறந்து விளங்குவர். இரவு நேரத்தில் வலம் வருபவர்கள் அஷ்டமாசித்திகளை அடைவதற்கு வாய்ப்புண்டு.