உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மலை மீது ஏறாதீர்கள்!

திருவண்ணாமலை மலை மீது ஏறாதீர்கள்!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, தீபமேற்றுவோர் மட்டுமே ஏற வேண்டும். அவ்வாறு தீபமேற்ற செல்வோர் உரிய விரதத்தை அனுஷ்டித்திருக்க வேண்டும். ஆர்வம் காரணமாக எல்லாரும் அதில் ஏறக் கூடாது. திருவண்ணாமலை சிவனின் வடிவமாக இருக்கிறது. அதன் மீது ஏறினால், சிவனையே மிதிப்பதற்கு ஒப்பாகும். இது மகாபாவமும் ஆகும். இந்த பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது. இந்த மலை அக்னி வடிவம் என்பதை இப்போதும் உணர முடியும். ஏனெனில், எவ்வளவு மழை பெய்தாலும், மலையில் இருந்து சொட்டுத் தண்ணீர் கூட கீழே வடியாது. சிவபெருமான் அக்னியைத் தன் நெற்றிக் கண்ணாகக் கொண்டுள்ளார். எனவே, மலை மீது ஏறுவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !