தீபதரிசனம் பாவவிமோசனம்!
ADDED :4004 days ago
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில், முருகப்பெருமானை அருணகிரிநாதர் தீபமங்கள ஜோதீ நமோநம என்று திருப்புகழில் பாடுகிறார். வேதாரண்யம் சிவன் கோவிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் துõண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால் தான், திருக்கார்த்திகையன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். வீடுகளிலும் தீபமேற்றி பாவச்சுமையை விலக்கிக் கொள்வர்.