உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதரில் இருவகை!

மனிதரில் இருவகை!

நடப்பு வாழ்க்கையில் நாம் இரண்டு வகை மனிதர்களைப் பார்க்கிறோம். பெரியவர்கள் கருணையினால் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்கள். அதனால், அவர்களை பெருமை குறைந்தவர்கள் என்று எண்ணக்கூடாது. சிறியவர்கள் மற்றும் முட்டாள்களைத் தேடி அவர்கள் இருக்கும் இடம் செல்வார்கள். அதனால் சிறியவர்களுக்குப் பெருமை உண்டு என்று எண்ணக் கூடாது. இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். பால், தயிர், மோர், நெய் இவை ஒரு தெரு வழியாகக் கடந்து நம்இல்லம் தேடி வருகின்றன. அதனால், அவற்றின் பெருமை குறைந்து விட்டதாகக் கருதக்கூடாது. ஆனால், கள், சாராயம் போன்றவை இருக்குமிடத்திலேயே விலையாகிறது. அதனை நாடி பலர் செல்கின்றனர். அதனால், அவற்றுக்குப் பெருமையா என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !