23 கருட சேவை
கருட சேவை என்பதுதான் பெருமாள் கோயில்களில் விசேஷமான வைபவம். அந்த கருட சேவையில் ஒரே சமயத்தில் பல மூர்த்திகளை தரிசிக்கும் வாய்ப்பு தஞ்சைவாசிகளுக்கு உண்டு. எப்படி? தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் வைகாசி திருவோண நாளில் 23 பெருமாள்கள் ஒரு சேர காட்சி கொடுப்பது விசேஷம். 1. மாமணிக் கோயில் நீலமேகப் பெருமாள், 2. நரசிம்மப் பெருமாள், 3. மணிகுன்றப் பெருமாள், 4. வேளூர் வரதராஜப் பெருமாள், 5. வெண்ணாற்றங்கரை கல்யாண வெங்கடேசப் பெருமாள், 6. கரந்தை யாதவ கண்ணன், 7. கொண்டிராஜபாளையம் யோக நரசிம்மர், 8. கோதண்ட ராமர், 9. கீழராஜவீதி வரதராஜப் பெருமாள், 10. தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், 11. அய்யங்கடைத் தெரு ராமஸ்வாமி பெருமாள், 12. எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், 13. கோட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், 14. கோவிந்தராஜப்பெருமாள், 15. மேல அங்கம் ரெங்கநாதர், 16. மேல் ராஜ வீதி விஜயராமப் பெருமாள், 17. நவநீத கிருஷ்ணன், 18. சகாநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணன், 19. மா சாவடி நவநீத கிருஷ்ணன், 20. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், 21. பள்ளி அக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், 22. வெங்காந்திடல் லட்சுமி நாராயண பெருமாள், 23. படித்துறை வெங்கடேசப் பெருமாள் என 23 கருட சேவை மகோத்ஸவம் வெண்ணாற்றங்கரையில் நடக்கிறது. இங்கு ஓடும் விண்ணாற்றை, விண்ணன் என்பவன் வெட்டினான் என்றும், பரம பதத்தில் ஓடும் விரஜா நதியே இங்கு ஓடுவதாகவும், விண்ணிலிருந்து வந்ததால் இதற்கு விண்ணாறு என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இது வெண்ணாறு எனப்படுகிறது.