உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேத்திர தரிசனம்

நேத்திர தரிசனம்

செங்கல்பட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில், திருமலைவையாவூரில் உள்ளது. பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில். கருவறையில் பெருமாள் செங்கோலுடன், ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் திருமார்பில் இரண்டு மகாலட்சுமிகளும் திகழ, திருவாசியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். பெருமாள் தசாவதாரம், அஷ்டலட்சுமி, சகஸ்ரநாம மாலைகள் மற்றும் தசாவதார ஒட்டியாணம் அணிந்திருப்பது சிறப்பு. வியாழக்கிழமை காலையில் மூலவர் நேத்திர தரிசனம் தருவது மிகவும் விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !