வீரட்டானேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் வைபவம்!
ADDED :3646 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவி லில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, கலச ஆவாகனம், பஞ்சாசன பூஜை, மூலவருக்கு மகா அபிஷேக அலங்காரம், பஞ்சபிரம்ம தீப பூஜை முடிந்து, பரணி தீபம் எற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி எழுந்தருளி, சொக்கபனை ஏற்றும் வைபவம் நடந்தது. அண்ணாமலையார் தீபஜோதியாய் பக்தர்களுக்கு காட்சியளிக்கும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.