மயூர கணபதி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3638 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மயூர கணபதி, முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையம் தென்றல் நகரில் உள்ள மயூர கணபதி ஆலய வளாகத்தில், முத்துமாரியம்மன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பாலமுருகன், நவக்கிரக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், வேதபாராயணம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை ஈரோடு அங்குராஜ் குருக்கள், அப்புலுபாளையம் விஜயராகவன் ஐயங்கார், கோவில் அர்ச்சகர் கணேசன் தலைமையில் மயூர கணபதி, முத்துமாரியம்மன் பரிவார தெய்வங்களுக்கு சிவாகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில்,
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.