உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

வேலூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

வேலூர்: காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டு அருகே அமைந்துள்ள, ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, நடந்தது. இதையொட்டி, காலை, 6 மணிக்கு, 4ம் கால யாக பூஜைகள், அவபிருத யாகம், விசேஷ திரவிய ஹோமங்கள், நடந்தது. பின்னர் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அனைத்து மும்மூர்த்திகளுக்கும் சம கால மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார தீபாராதனை, ஐய்யப்ப ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !