வெங்கடாஜலபதி கோவில் தாயாருக்கு பிரமோற்சவம்
ADDED :3633 days ago
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தாயாருக்கு நேற்று நடந்த பிரமோற்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், அலர்மேல் மங்கை பத்மாவதி தாயார் பிரமோற்சவ விழா, கடந்த, 25ம் தேதி துவங்கியது. நேற்று, ஆறாம் நாள் விழாவில், காலையில் திருப்பாவை சேவை, நித்யபடியை தொடர்ந்து தாயார் மகாலட்சுமி அலங்காரத்தில் பூப்பல்லக்கில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். மதியம் தீர்த்தவாரி, 108 லிட்டர் பால் அபி?ஷகம், திருமஞ்சனம், ஹோமங்களை தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் மோகினி அலங்காரத்தில், 108 திருவிளக்கு பூஜையும், கண்ணாடி மாளிகையில் சேவை நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆயிர வைசிய சமூக மகாஜன நிர்வாகிகள் செய்து உள்ளனர்.