உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலை நடை திறந்து அடைக்கும் நேரம் மாற்றம்!

பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலை நடை திறந்து அடைக்கும் நேரம் மாற்றம்!

சபரிமலை:  பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலையில் நடை திறந்து அடைக்கும் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இது அமலுக்கு வந்தது. சபரிமலையில் மண்டலபூஜை காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கும், மாலை நான்கு மணிக்கு நடை திறந்து இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். பொதுவாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 24 மணி நேரமும் 18-ம் படியில் பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். இவ்வாறு நடை அடைக்கப்பட்டிருக்கும் போது படியேறுபவர்கள் மீண்டும் வடக்கு வாசல் வழியாக சென்று சாமி கும்பிட வேண்டும். என்றாலும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் போது பல சிரமங்கள் ஏற்படுகிறது.  தமிழ்நாட்டில் மழை காரணமாக முதல் பத்து நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் தற்போது கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூட்டம் அதிகமாகும் போது நடை திறக்கும் நேரமும் மாற்றப்படுகிறது. இது அமலுக்கு வந்தது. காலை நான்கு மணிக்கு பதிலாக மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டது.  அந்தந்த நாட்களில் நிலைமைக்கேற்ப கோயில் நிர்வாக அதிகாரி, தந்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !