உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகஆண்டு விழா

வீரராகவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகஆண்டு விழா

திருப்பூர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், கடந்த ஆண்டு, டிச.,1ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், கால சந்தி, பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 8:30 க்கு, மூலவர் சன்னதி முன்பு, கலச பூஜை, ஸ்ரீ கனகவல்லி தாயார், ஸ்ரீபூமி தேவி தாயார் உடனமர் ஸ்ரீவீரராகவ பெருமாளுக்கு, 108 மூலிகை கொண்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடை பெற்றது. பெருமாள், தாயார் களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவையொட்டி, உற்சவர் மற்றும் மூலவருக்கு, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !