மூழ்கிய கோயில் குளம்: விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்த கருநாகம்!
ADDED :3628 days ago
சென்னை : தொடர் கனமழை மற்றும் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகியவற்றின் காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
பலத்த மழை காரணமாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலின் நீராழி மண்டபம் மூழ்கியது. இந்த தெப்பக்குளத்தின் நீராழி மண்டபத்தில் மச்சாவதார விஷ்ணு சிலை ஒன்று உள்ளது. பலத்த மழை காரணமாக பாதியளவு மூழ்கிய இந்த சிலை மீது, 7 அடி நீளமுள்ள கருநாகம் ஒன்று தஞ்சம் அடைந்து படமெடுத்து நின்றது, மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கொட்டும் மழையிலும் இதைக் காண ஏராளமானோர் அங்கு திரண்டனர்.