நவபாஷாணம் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை
ADDED :3628 days ago
ராமநாதபுரம்: கார்த்திகை மாதத்தையொட்டி தேவி பட்டினம் நவபாஷாணம் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த கோயிலில் ராமர்பிரான் வழிபாடு செய்ததால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நவகிரங்களை வழிபாடு செய்ய தமிழகம் மட்டுமின்றி வடமாநிலம், வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை மாதத்தை யொட்டி சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு அதிகளவில் வருகின்றனர். தற்போது கோயில் நிர்வாகத்தை பொறுப் பேற்றுள்ள இந்துசமய அறநிலையத்துறை நுழைவு கட்டணம் உள்ளிட்ட அனைத்து வித வரிகளையும் ரத்து செய்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியாக நவகிராகங்களை வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர்.