மகப்பேறு அருளும் கணபதி!
ADDED :3996 days ago
நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரிகிறார் பொல்லாப்பிள்ளையார். தினமும் அவரை மனதில் தியானம் செய்தால், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குழந்தைபிறந்ததும் இவர் சன்னிதிக்கு குழந்தையுடன் வந்து, இங்குள்ள ஜன்னல் பகுதியில் குழந்தையை உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கிக் கொள்ளும் சம்பிரதாயம், பக்தர்களின் நன்றிக் கடனாக இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.