உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசேஷ படையல்!

விசேஷ படையல்!

கன்னியாகுமாரி பகவதி கோயிலில் நடத்தப்படும் எந்தத் திருவிழாவாக இருந்தாலும், முதன் முதலில் அங்குள்ள பத்ரகாளி அம்மனுக்கு பலி, பூஜை நடந்த பின்புதான் விழா தொடங்கப்படும். ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும் பத்ரகாளி அம்மனுக்கு விசேஷ பூஜையோடு விசேஷப்படையாலும் இடப்படுகிறது. இந்தப் படையலில் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சியும் கலந்து அம்மன் சன்னதியில் பெரிய துணி விரித்து அதன் மேல் உள்ள வாழை இலைகளின் மீது மலைபோல் குவிக்கப்படுகிறது. பூஜையின் முடிவில் அதை அம்மன் பிரசாதமாகப் பெற, கன்னியாகுமரியின் பக்கத்து கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். இதேபோல் மார்கழி இரண்டாவது செவ்வாயில் ஒரு பெரும் படையல் விழா நடத்தப்படுகிறது. இதை கொடாவி விழா என்கிறார்கள். இந்த பத்ரகாளி ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !