உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவுடையாரில் அம்பிகை

ஆவுடையாரில் அம்பிகை

வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிலோடு திருத்தலத்தில் அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். பெரும்பாலும் சிவபெருமானே ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால், இக்கோயிலில் அம்பாள் ஆவுடையாரின் மீது நின்று அருள்பாலிக்கிறாள். இக்கோயிலுள்ள சனீஸ்வரருக்கு சனிக்கிழமையன்று 17 பாகற்காய்களை மாலையாகக் கட்டி அணிவித்து, எள் தீபமேற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் நீங்கி, இனிமை ஏற்படும் என்பது நம்பிக்கை. அதேபோல் செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இத்தல முருகனுக்கு பீட்ருட் சாதம் படைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை நீங்கி சிறந்த வாழ்க்கைத் துணை அமையும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !