லிங்க வடிவ முருகன் கோயில்
ADDED :3996 days ago
ஏலகிரி மலையினை ஒட்டி அமைந்துள்ள ஒரு பகுதி ஜலகாம்பாறை. இங்கு, சிவலிங்க வடிவில் அமைந்துள்ளது வெற்றிவேல் முருகன் கோயில். கருவறையில் முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார். இம்மலைகளில் இருந்து உருவாகும் சிறு அருவி திருமால் முருகன் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சிவலிங்கத்தின் பின்புறம் குடைபிடிப்பது போல அமைந்த மிகப்பெரிய நாக சிலை உள்ளது.