உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை!

ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை!

விழுப்புரம்: விழுப்புரம் சந்தான கோபாலபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோவிலில், உள்ள ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி, மூலவர் ஐய்யப்பன் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், நெய், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், மாலை அணிந்த ஐய்யப்ப பக்தர்களின் வழிபாடுகள் மற்றும் படி பூஜைகள் நடந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சூரி குருசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !