உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 145 அடி உயர வாசவி உருவச்சிலை பாதங்கள் வீதியுலா!

145 அடி உயர வாசவி உருவச்சிலை பாதங்கள் வீதியுலா!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீ வாசவி உருவச்சிலையின் பாதங்கள் பொள்ளாச்சி நகரில்  திருவீதி உலாவாக அழைத்து வரப்பட்டது.  அகில பாரத ஸ்ரீ வாசவி பெனுகுண்டா டிரஸ்ட் மூலமாக பெணுகுண்டாவில் நிறுவப்பட உள்ள  ஸ்ரீவாசவியின் 145 அடி விஸ்வரூப தரிசன பஞ்சலோக உருவச்சிலையின் பாதங்கள், பொள்ளாச்சி நகரில் தரிசனத்திற்காக கொண்டு வரப்பட்டது.   தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு தேர்நிலையத்திலிருந்து கடை வீதி வழியாக அம்மன் நிஜ பாதங்கள், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ÷ காவிலுக்கு கொண்டு வரப்பட்டது.   தொடர்ந்து, அம்மனின் நிஜ பாதங்களுக்கு காலை, 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பாலாபிேஷகம்,  பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !