பண்ருட்டி வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
ADDED :3927 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூஜையையொட்டி உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 6ம் தேதி நடந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் முதல் துவங்கியது. காலை 10:00 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், அனுமன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.