உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை, கடலுார் மாவட்டங்களில் சத்யசாயி சேவா வெள்ள நிவாரணம்

சென்னை, கடலுார் மாவட்டங்களில் சத்யசாயி சேவா வெள்ள நிவாரணம்

சென்னை: சென்னை, கடலுார் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இரண்டு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க, சத்யசாயி சேவா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:சென்னை, கடலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, இரண்டு வார காலத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு, எண்ணெய், உடை, பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்க உள்ளோம். இப்பொருட்களை தானமாக வழங்க முன்வருபவர்கள், நாடு முழுவதும் உள்ள, சத்யசாயி நிறுவன கிளைகளில் வழங்கலாம். எங்களிடம் நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர், சென்னை, அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, தமிழ்நாடு சத்யசாயி சேவா நிறுவன தலைமை இடமான, சுந்தரத்தில் வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிவாரணப் பொருட்கள் கொடுக்க விரும்புவோர் சுரேஷ் - 98427 21715; சந்திரன் - 94444 61236; சுந்தரம் - 044 24346255, 044 24313337 ஆகிய போன் எண்களிலும், இ - மெயில்: tnvpsuresh@gmail.com மூலமும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !