உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலத்த மழை பெய்தும் திருவாடானை கோயில் குளம் நிரம்பவில்லை

பலத்த மழை பெய்தும் திருவாடானை கோயில் குளம் நிரம்பவில்லை

திருவாடானை: திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தும் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் குளம் நிரம்பாததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். திருவாடானையில் பிரசித்திபெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர்களி லிருந்து ஏராளமான பக்தர்கள் நாள் தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலின் அருகில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக படித்துறையுடன் கூடிய தெப்பகுளம் உள்ளது. திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தும் தெப்பகுளம் நிரம்பவில்லை. வரத்து கால்வாய்கள் அடைபட்டுள்ளதாலும், ஆக்ரமிக்க பட்டுள்ளதாலும் தான் தெப்பகுளத்துக்கு தண்ணீர் வர வாய்ப்பில்லாமல் போனதாக பக்தர்களிடையே குற்றச் சாட்டு எழுந்துள்ளது. குளத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. சுற்று சுவர்கள் இடிந்து வருகிறது. குளத்தின் கரைகள் இரவுநேர திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவருவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தெப்ப குளத்தில் தண்ணீரை தேக்கவும், முறையாக பராமரிக்கவும் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !