ஜபம் செய்யும் முறை!
ADDED :3988 days ago
வாசிகம், உமாம்சு, மானசம் என மூன்று முறையில் ஜபம் செய்யலாம். அடுத்தவர் காதில் விழும்படி ஜபம் செய்வது - வாசிகம். தனது காதில் மட்டும் விழும்படி ஜபிப்பது - உமாம்சு, மனதினால் மட்டும் ஜபிப்பது - மானசம், இதில், வாசிகம் என்பது ஒரு மடங்கு பலனளிக்கும்; உமாம்சு நூறு மடங்கு பலனளிக்கும்; மானசம் ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும். ஜபம் செய்யும் நேரத்தில் மகிழ்ச்சியாகவும், சுத்தமாகவும், மென்மையாகவும், மந்திர அர்த்தத்தை நினைத்தபடியும், மற்ற கவலைகளை எண்ணாமலும் இருக்க வேண்டியது அவசியம்.