திருப்தி செய்வது தர்மமாகும்
ADDED :3988 days ago
வேதத்தினால் ரிஷிகளையும், ஹோமத்தினால் தேவர்களையும் சிராத்தத்தினால் பித்ருக்களையும், அன்னத்தினால் அதிதிகளையும் திருப்திப்படுத்த வேண்டும். அதேபோன்று, மலர்களினால் பூதங்களையும், உழைப்பினால் எஜமானனையும், தரிசனத்தினால் தெய்வங்களையும், பிரியத்தினால் பெற்றோர்களையும், அன்பினால் மனைவியையும் பாசத்தால் பிள்ளைகளையும் திருப்தி செய்யவேண்டியது தர்மமாகும்.