வெள்ளிக்கிழமை கனகப்பொடி!
ADDED :3988 days ago
ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் கனகப்பொடி சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து, அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப் பொடி. உலர்ந்த தவிட்டில் வைட்டமின் -பி ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதுவே, கனகப்பொடியின் சிறப்பு! இதை அம்பாளுக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டுச் சாப்பிடலாம்.