உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரட்டை விநாயகர்

இரட்டை விநாயகர்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில், தல்லாகுளத்தில் உள்ளது இரட்டை விநாயகர் திருக்கோயில். சுயம்பு மூர்த்தமான இந்த இரட்டை விநாயகர்களுக்கு தேங்காய் மாலை சாத்தி வேண்டி கொண்டால் விரைவில் நினைத்தது நிறைவேறும். திருமணம் கைகூட, அவரவர்களின் வயதைக் குறிக்கும் வகையில் விரலி மஞ்சளைத் தொடுத்து மாலையாக்கி விநாயகப்பெருமானுக்குச் சாத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறும் திருவிளக்கு பூஜை மிகவும் விசேஷம். தவிர, சனிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பதும் பக்தர்களின் அனுபவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !