திருமணத் தடை நீக்கும் அம்பாள்
ADDED :3988 days ago
மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் உள்ளது திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில், அம்பாள் ஏலவார்குழலி, திருமணத் தடை ஏற்படும் ஆண், பெண் இருபாலரும் திருமணஞ்சேரியைப் போலவே இங்கு பரிகார பூஜைகள் செய்து அம்பாளுக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சுவாமி ஏடகநாதேஸ்வரர் பில்லி, சூன்யங்களைப் போக்கும் வரப்ரசாதி.