வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக சிறப்பு பூஜை
ADDED :3760 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூஜையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தையொட்டி 4ம் நாள் மண்டலாபிஷேக பூஜை நடந்தது. விழாவையொட்டி மாலை மூலவர் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயார், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு பூ ஜை நடந்து. இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.