மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) அதிகரிக்கும் பணவரவு!
முயற்சி திருவினையாக்கும் என்ற கொள்கையுள்ள மிதுன ராசி அன்பர்களே!
சுக்கிரன் டிச. 26 வரை துலாம் ராசியில் இருந்து வசதிகளை பெருக்குவார். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பணவரவு அதிகரிக்கும். மேலும் சனிபகவானின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ஜன. 8ல் ராகு 3ம் இடமான சிம்ம ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் மேன்மையையும், எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். ஆனால், கேது 9-ம் இடமான கும்பத்திற்கு செல்வதால் பொருள் நஷ்டம் வரலாம். ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குரு பகவான் டிசம்பர் 20-ந் தேதி 4-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வதால் மன உளைச்சலையும், உறவினர் வகையில் கருத்து வேறுபாட்டையும் உருவாக்குவார். புதன்,சூரியன் இணைந்திருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் குழப்பம் வரலாம். மனைவி வகையில் கருத்து வேறுபாடும், வயிறு தொடர்பான உபாதைகளும் வரலாம். தம்பதியினர் விட்டுக் கொடுத்து போகவும்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது வரும். ஆனால், திறமைக்கேற்ற மதிப்பும், வருமானமும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. டிச. 19,20ல் எதிர்பாராத நன்மை நடக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் சிறப்பாக கிடைக்கும். புதிய வியாபாரத்தை இம்மாதம் தொடங்க வேண்டாம். அறிவை பயன்படுத்தி நடத்தும் தொழில்கூடுதல் வருவாய் தரும். ஜன. 6,7ல் எதிர்பாராதவகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள் புகழோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருவாயும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் உதவி உண்டு.
விவசாயிகளுக்கு கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். எனினும் பொருளாதார வளம் மேம்படும். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாள்: டிச. 19,20,21,22,25,26,30,31 ஜன. 6,7,8,9,10.
கவன நாள்: ஜன 11,12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: கருப்பு, வெள்ளை
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை அம்மனை வணங்க வேண்டும்.