கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு வருது!
கனிவும் கருணையும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
3ம் இடத்தில் இருக்கும் சனி தொடர்ந்து நன்மை தரும். டிச. 26ல் சுக்கிரன் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மாத மத்தியில் வக்கிரத்தில் சிக்கினாலும்,அவரால் நன்மை தர இயலும். குரு டிச. 20ல் பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறினாலும், அவரால் நன்மை தர இயலாது. ஜன. 8ல் கேது 6-ம் இடமான கும்பத்திற்கு வந்திருப்பதன் மூலம், பின்தங்கிய நிலை மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். கேது நன்மை தரும். ஆனால் ராகு இடம் மாறி 12ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துõரதேச பயணத்தையும் கொடுப்பார். குடும்பம் சுக்கிரனால் சிறப்படையும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். அலுவலகத்தில் நல்ல பெயரும். மதிப்பும் கிடைக்கும். வேலையில் திருப்தி காண்பீர்கள். டிச. 26க்கு பிறகு பதவி உயர்வு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சுக்கிரனால் எளிதாக வங்கி கடனும் கிடைக்கும். பெண்களால் தொல்லை வரலாம். கவனம். டிச. 28 முதல் அரசு வகையில் அனுகூலமான போக்குகாணப்படவில்லை. சிலர் திடீர் சோதனைக்குஆளாகலாம். டிச. 17,18 ஜன.13,14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல வருவாய் பெறுவர். அரசு வகையில் பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். படிப்பில் முன்னேற்றம் உண்டு.
விவசாயிகளுக்கு கரும்பு, நெல் கோதுமை, சோளம்., கேழ்வரகு பயிர்களில் அதிக வருமானம் காணலாம். கால்நடை செல்வம் பெருகும்.
பெண்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். கணவர் மற்றும் குடும்பத்தார் உங்களை புகழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.
நல்ல நாள்: டிச. 17,18,19,20,25,26,27,28,29, ஜன. 1,2,3,6,7,13,14.
கவன நாள்: டிச. 21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: தினமும் சூரியனை வழிபடவும். செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.