உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வேலை கூடுது! சலுகையும் உயருது!

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வேலை கூடுது! சலுகையும் உயருது!

நல்லெண்ணம் படைத்த மகர ராசி அன்பர்களே!

சனிபகவான் 11-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். சுக்கிரன் நற்பலனை கொடுப்பார். குரு மாத முற்பகுதியில் கன்னி ராசிக்கு மாறி நற்பலனை கொடுப்பார்.உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையேஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.ஜன.8ல் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. சில பின்னடைவுகளைச்சந்திக்கும் சூழல் உண்டு. மற்ற கிரகங்களின் அடிப்படையில் கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். ஆடம்பரபொருட்களை வாங்க வாய்ப்பு உண்டு. பணவரவு,சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். பெண்கள்உதவிகரமாக இருப்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளில் சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். செலவு அதிகரிக்கலாம். பணவிஷயத்தில் கவனம் தேவை. டிசம்பர் 25,26ல் எதிர்பாராத வகையில் பணவரவுஇருக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானமும், சலுகையும் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். ஜனவரி 4,5-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லை, அவப்பெயர் ,போட்டி மறையும். பணவரவும் உண்டு.
அரசியல்வாதிகளின் செல்வாக்குக்கு எந்த குறையும் வராது. எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.
மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் விருந்து விழா எனசென்று வருவர். புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: டிச. 19,20,25,26,27,28,29, ஜன. 4,5,6,7,11,12.
கவன நாள்: டிச. 30,31 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6  நிறம்: கருப்பு, மஞ்சள்

பரிகாரம்: செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.சனிக் கிழமை அனுமனை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !