சந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3586 days ago
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் சந்தவெளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகத்திற்காக, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் கோ பூஜை, தன பூஜையுடன் துவங்கியது.சனிக்கிழமை, இரண் டாம் கால பூஜையும், நேற்று, பூஜை நிறைவு பெற்று காலை, 8:00 மணிக்கு கலச புறப்பாடும், 9:45 மணியளவில் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும், 10:00 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இரவு, 8:00 மணியளவில், சந்தவெளி அம்மன் அலங்காரத்தில் விதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.