உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை அய்யப்ப சுவாமி கோவிலில் 46ம் ஆண்டு திருவிழா!

ஊத்துக்கோட்டை அய்யப்ப சுவாமி கோவிலில் 46ம் ஆண்டு திருவிழா!

ஊத்துக்கோட்டை: அய்யப்ப சுவாமியின், 46ம் ஆண்டு விளக்கு பூஜை திருவிழாவை ஊத்துக்கோட்டையில் நடந்தது. ஊத்துக்கோட்டையில் அய்யப்ப சுவாமியின், 46வது ஆண்டு திருவிளக்கு பூஜை குருசாமி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதையொட்டி, 11ம் தேதி காலை, 05:00 மணிக்கு  ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் கணபதி ேஹாமம் நடந்தது.  தொடர்ந்து அங்குள்ள அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பின்னர் வெள்ளிக் கவசம் அணிவித்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.  நேற்று முன்தினம் கோவிலில் இருந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  முன்னதாக, பெண்கள், சிறுமியர் விளக்கு ஏந்திச் சென்றனர். இறுதியில், நீலகண்டேஸ்வரர் கோவிலில் படிக்கற்பூரம் ஏற்றி  வழிபட்டனர்.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அய்யப்ப சுவாமி சேவா சங்கத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !