உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொம்பு தூக்கி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா

கொம்பு தூக்கி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா

மேலூர்: மேலூர் அருகே கேசம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ கொம்பு தூக்கி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று துவங்கியது. கேசம்பட்டி,  சாணிபட்டி, பட்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எட்டு நாட்கள் மது அருந்தாமலும், மாமிசம் சாப்பிடாமலும் கடும்  விரதமிருந்தனர். முதல் நாள் திருவிழாவான நேற்று கண்மாய்பட்டியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள், பரிவார தெய்வங்கள் மற்றும்  சாமி சிலைகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் 8 கி.மீ., தொலைவில் உள்ள சாணிபட்டிக்கு சுமந்து சென்றனர். இரண்டாம் நாள் திரு விழாவான இன்று(டிச.15) பொதுமக்கள் சாணிபட்டியில் இருந்து அழகர்மலையடிவாரத்தில் உள்ள கேசம்பட்டிக்கு சிலைகளை சுமந்து சென்று ÷ காயில்களில் இறக்கிவைத்து விழா கொண்டாடினர்.  30 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து சமூக மக்களும் ஒன்றாக சேர்ந்து திருவிழா கொண்டாடியது  குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !