உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் பவனி

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் பவனி

கோவை: கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் பவனி நடந்தது. ஸ்ரீ மருதமலை முருகன் சோமவார அன்னதான கமிட்டி  சார்பில், கடந்த, 13ம் தேதி, குரும்பபாளையம் ஸ்ரீ பெரிய விநாயகர் கோவிலில், அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை 10:00 மணிக்கு மேல், அபிஷேக, அலங்காரம், நண்பகல், 12:00 மணிக்கு மேல், அன்னதானம், மாலை 5:30க்கு மேல் த ங்கத்தேர் பவனி நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !