பூலோகநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3708 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாகம் நடத்தப் பட்டது. பூஜைக்கு பிறகு பூலோகநாதருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை மோகன், குமார், ஹரி குருக்கள் செய்தனர். சர்தார்சிங் ராணா, சந்திரசேகரன், மனோகர், பத்மினி கலந்து கொண்டனர்.