உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா 90வது பிறந்த தினம் 60 வயது பக்தர்களுக்கு பாத பூஜை

சாய்பாபா 90வது பிறந்த தினம் 60 வயது பக்தர்களுக்கு பாத பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் சார்பில், 60 வயதுக்கு மேற்பட்ட சாய் பக்தர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் சார்பில், சாய்பாபாவின் 90வது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ஸ்ரீவாரி கார்டனில் உள்ள சத்ய சாய் சேவா சங்க கட்டடத்தில், 60 வயதிற்கும் மேற்பட்ட சாய் பக்தர்களுக்கு, சமிதி சார்பிலும், அவர்கள் குடும்பத்தார் சார்பிலும் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 90 முதியவர்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. முதியோர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்; பெற்றோருக்கு குழந்தைகள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பாத பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, சத்ய சாய் சேவா சங்கத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !