உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசன விழா

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசன விழா

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடக்கிறது. ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 11ல் துவங்கி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. தினமும் காலை, 10:00க்கு, நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடி, மூலவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது; நேற்று முதல், அதிகாலை, 5:30க்கு, தனுர் மாத வழிபாடு, பூஜை நடக்கிறது. வரும், 20ம் தேதி காலை, 10:00க்கு, மோகினி அலங்காரம், ஸ்ரீநாச்சியார் திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளி, வீதி உலா நடக்கும். 21ல், சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அன்று அதிகாலை, 3:00க்கு, வேத மந்திரங்கள் முழங்க, எம்பெருமானுக்கு மகா அபிஷேகம், அதிகாலை, 5:30க்கு சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சிறப்பு அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். அன்றிரவு இரவு, 8:00 மணிக்கு, ராப்பத்து உற்சவம், திருவாய் மொழி திருநாள் துவங்குகிறது. 30ல், ஆழ்வார் மோட்சம், ஜன., 12ல், கூடாரை வெல்லும் சீர் உற்சவம் விழா; மாலை, 6:00க்கு, சுவாமி திருக் கல்யாணம் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன விழா: ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், 17ல் ஆருத்ர தரிசன விழா, இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமாணிக்க வாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கி, 25 வரை நடக்கிறது. 25, இரவு 6:30க்கு, சுவாமி திருக்கல்யாணம்; 26, அதிகாலை, 3:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஸ்ரீசிவகாமி அம்மன் உடனமர் ஸ்ரீநடராஜ பெருமான் பட்டி சுற்றுதல் மற்றும் வீதி உலா நடைபெறுகிறது. 27ல், வசந்த உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !